உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக எல்லா இடங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தியாவில் 21நாட்கள் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காவல்துறையினர் சட்டம் ஒழுங்கை காக்கும் பனியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் அருணாசலப் பிரதேசத்தில் காவல்துறையில் பணியாற்றக்கூடியவரின் மகள் இவ்வாறான பதாகையை கையில் ஏந்திய வண்ணம் இருக்கிறாள்.
அந்த பதாகையில் இவ்வாறு இருக்கும் விடயம்: என் தந்தை ஒரு பொலிஸ்காரர். அவர் உங்களுக்கு உதவுவதற்காக எங்களிடம் இருந்து விலகியிருக்கிறார். தயவு செய்து அனைவரும் வீட்டில் இருந்து அவருக்கு உதவுங்கள்.
இந்த சம்பவம் இந்திய மக்களுக்கு மாத்திரம் இல்லை. உலகத்தில் வாழக்கூடிய அனைவருக்கும் இதில் படிப்பினை உண்டு.
### சற்று சிந்தியுங்கள்.###