தெலுங்கானா மாநிலத்தில் 120 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 3 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் பப்பன்னாபேட் மண்டலில், கோவர்தன் என்பவரின் 3 வயது மகன் ஷாய் வர்தன். தனது தந்தை மற்றும் தாத்தாவுடன் நேற்று விவசாய நிலத்தில் நடந்து சென்ற போது, தவறுதலாக மூடப்படாத ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து விட்டான். முதலில் 25 அடியில் சிக்கியிருந்த சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட போது, மண் சரிவு ஏற்பட்டதால், குழந்தை கீழிறங்கியது.
இதனையடுத்து குழந்தையை மீட்கும் பணிகள் நடந்தன. ஐதராபாத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்தது. குழந்தை சுவாசிக்க ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. பக்கவாட்டில் பள்ளம் தோண்டி, குழந்தையை மீட்கும் முயற்சியும் நடந்தது. ஆனால் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. சிறுவன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டான்.
By :Dinamalar news