ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் உயிரிழந்து கரை ஒதுங்கிய திமிங்கலங்களின் எண்ணிக்கை 380 ஆக அதிகரித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள தீவு கடற்கரையான டாஸ்மானியாவில் 460 பைலட் திமிங்கலங்கள் கடந்த 21-ம் தேதி திடீரென கரை ஒதுங்கின. பல திமிங்கலங்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீண்டும் கடலுக்கு செல்ல முடியாமல் தத்தளித்து வந்தன.  தகவல் அறிந்து திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய பகுதிக்கு விரைந்து சென்ற அரசு ஆராய்ச்சியாளர்கள், தன்னார்வலர்கள் பலர் திமிங்கலங்களை மீண்டும் கடலுக்குள் விட முயற்சி செய்து வருகின்றனர். 

இந்நிலையில், கடந்த 3 நாட்களாக மேற்கொண்டு வரும் முயற்சியில் 50 திமிங்கலங்கள் மீண்டும் கடலில் விடப்பட்டுள்ளன. ஆனால், கரை ஒதுங்கிய மொத்த திமிங்கலங்களில் இதுவரை 360 திமிங்கலங்கள் உயிரிழந்து விட்டன என்று மீட்பு பணியில் ஈடுபட்டுவரும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  மேலும், 30 திமிங்கலங்கள் இன்னும் உயிருடன் கரையிலேயே இருப்பதாகவும், அந்த திமிங்கலங்களை மீண்டும் கடலுக்கு அனுப்பும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகமும் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

திமிங்கலங்கள் கூட்டமாக செல்லும்போது அவற்றை முன் நின்று அழைத்து செல்லும் தலைமை திமிங்கலங்கள் வழி தவறி அனைத்து திமிங்கலங்களையும் எதிர்பாராத கரைப்பகுதிக்கு அழைத்து வந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

-தகவல் : தினபூமி செய்திகள்

By Admin

Leave a Reply