கொரோனா உலகளவில் உச்சத்தை அடைந்துள்ள நேரம்.
பரம ஏழையிலிருந்து உலக பிரபலம் வரை…
அபிவிருத்தி அடையாத சாதாரண நாடு முதல் உலக வல்லரசாக தன்னை காட்டிக் கொள்ளும் நாடு வரை…
எந்த வித்தியாசமும் பாகுபாடும் அதற்கு தெரியவில்லை.
மருத்துவத்தில் உச்சம் தொட்ட பல நாடுகள் தாக்குப்பிடிக்க முடியாமல் அச்சத்தில் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன.
உலகளாவிய ரீதியில் கொரோனாவினால் மரணித்தோரின் எண்ணிக்கை 20000 ஐ நெருங்குகிறது.
இலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை 100 ஐ தாண்டியுள்ளது.
அனைத்து மக்களையும் அல்லாஹ் பாதுகாப்பானாக.
தயவு செய்து அரச கட்டளைகலுக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ளுங்கல்
தேவையானவற்றை வாங்கவும் வேண்டும். தேவைகளை முடித்துக் கொள்ளவும் வேண்டும். நியாயமான எண்ணம்தான்.
ஆனால் எம்மையும் நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமே.
எதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்படுகின்றதோ அந்த நோக்கத்தை ஒரே நாளில் சிதைக்கும் வகையில் நாம் நடந்து கொள்ளக்கூடாது.
கொரோனாவை வெல்வோம் எம்மை காப்போம்.
அனைத்துக்கும் இறைவன் துணை புரிவானாக.
ஆக்கம்: Maheesa Riyas