Football Friday”  நிகழ்ச்சி நிரல் கொழும்பு குதிரை பந்தய திடலில் நேற்று (19) ஆரம்பமானது.

ஆரம்ப நிகழ்வு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் பங்களிப்புடன் நடைபெற்றது.

கொவிட் தொற்று நிலைமை காரணமாக கடந்த காலம் முழுவதும் பொதுமக்கள் வீடுகளில் இருந்தே காலத்தை கழிக்க வேண்டியிருந்தது. இதனால் பெரும்பாலானோருக்கு தமது உடல் ஆரோக்கியத்திற்காக உடல் பயிற்சி மற்றும் விளைளயாட்டுகளில் ஈடுபட சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

இந்த நிலைமையை கருத்தில் கொண்டு விளையாட்டுத்துறை அமைச்சர் பொதுமக்களுக்கு தமது தேகாரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு சந்தர்ப்பங்களை ஏற்படுத்தியுள்ளார். இதன் முதற்கட்டமாகவே இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் கீழ் ‘சைக்கிள் சன்டே’ என்ற வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடத்தப்படவுள்ளது.

“Football Friday” வேலைத்திட்டம் இதன் 2 ஆவது கட்டமாக நடைபெறுகிறது. ஆரம்ப தின நிகழ்வு மாலை 6.00 தொடக்கம் இரவு 7.00 மணிவரை கொழும்பு குதிரை பந்தய திடலில் நடைபெற்றது.

By Admin

Leave a Reply