அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பைடனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இவாங்கா ட்ரம்ப் கடவுள் அவருக்கு ஞானத்தையும், தைரியத்தையும் கொடுப்பாக என்று கூறியுள்ளார்.
மேலும் கூறியதாவது : அமெரிக்க குடும்பங்களுக்காக போராட வாஷிங்டனுக்கு வந்தேன், அதைச் செய்து முடித்து விட்டேன் என்றும் அமெரிக்கா எதிர்காலத்திற்காக செய்துள்ளதை நினைத்து பெருமை கொள்வதாகவும், மேலும் அமெரிக்கா அதிபரின் ஆலோசகராக பணியாற்றியது என வாழ்நாளின் சிறந்த தருணமாகும் என்றும் அவர் கூறினார்.
அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பதவிக் காலம் நிறைவடைந்தது. இதையடுத்து அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறினர்.