யானையுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் திருகோணமலை – புத்தளம் ஏ12 பிரதான வீதியின் கன்னியா பகுதியில் திங்கட்கிழமை (14) இரவு இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வவுனியா புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த முபாரக் நிப்றாஸ் (வயது 28) என்ற இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் அவரது சக நண்பரான சயான் (வயது 22) என்பவர் காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
திருகோணமலையில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் யானையுடன் மோதியதால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகின்றது. மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
