Share this: Click to share on X (Opens in new window) X Click to share on Facebook (Opens in new window) Facebook Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp Like this:Like Loading... Related Post navigation நாங்கள் வெற்றிபெறாத உள்ளூராட்சி மன்றங்களுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று நான் சொல்லவில்லை, என ஜனாதிபதி தெரிவிப்பு..!—————————————————————–உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து தாம் வெளியிட்ட கருத்து எதிர்க்கட்சிகளால் தவறாக விளங்கிக்கொள்ளப்பட்டதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.அரசியல் பேரணி ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றிபெறாத உள்ளூராட்ச்சி உறுப்பினர்களுக்கு நிதி வழங்கப்படாது என தாம் கூறியதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார்.தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய ஜனாதிபதி, மத்திய அரசு கவனமாக சேகரித்த நிதியை ஊழல் நிறைந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்க மாட்டோம் என்று மட்டுமே கூறியதாகவும், NPP கட்டுப்பாட்டில் உள்ள மன்றங்களுக்கு மட்டும் நிதி வழங்கப்படும் என கூறவில்லை எனவும் விளக்கினார்.“உள்நாட்டு வருமானத் திணைக்களத்துடனான தினசரி கூட்டங்கள் மற்றும் சுங்கத் திணைக்களத்தின் நெருக்கமான கண்காணிப்பு மூலம், கருவூலத்தில் பணம் சேகரிக்கப்பட்டுள்ளது.இந்த கவனமாக சேகரிக்கப்பட்ட பணத்தை ஊழல் நிறைந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்க முடியாது. நுவரெலியா நகர சபையில் ஒரு குழு ஊழல் செய்தால், அவர்களுக்கு இந்த நிதியை ஏன் வழங்க வேண்டும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.மத்திய அரசு பொதுமக்களின் நிதியை தவறாக பயன்படுத்துவதை தவிர்ப்பது போல, உள்ளூராட்சி மன்றங்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.“மத்திய அரசு திருடாமல் இருக்கும்போது, உள்ளூராட்சி மன்றங்கள் திருடினால் என்னவாகும்? மத்திய அரசு வீண் விரயத்தை தவிர்க்கும்போது, பிரதேச சபைகள் பணத்தை விரயம் செய்கின்றன. மத்திய அரசு தனது கடமைகளை செய்யும்போது, உள்ளூராட்சி மன்றங்கள் மக்களை ஏமாற்றுகின்றன. மக்களின் பணத்தை இத்தகைய அமைப்புகளுக்கு தெரிந்தே ஏன் வழங்க வேண்டும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.மத்திய அரசு கவனமாக சேகரித்த மக்களின் பணத்தை, பிரதேச சபைகள் அல்லது நகர சபைகள் தவறாக பயன்படுத்துவதற்கு வழங்கப்பட மாட்டாது என்று தனது கருத்து தெளிவாக உள்ளதாக ஜனாதிபதி மீண்டும் வலியுறுத்தினார். இந்தியாவின் பழமையான தற்காப்புக் கலையான களரிபயட்டை 82 வயது மூதாட்டி ஒருவர் தொடர்ந்து கற்றுக் கொடுத்து வருகிறார்!