Share this:TwitterFacebookWhatsAppLike this:Like Loading... Related Post navigation இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டியமைக்காக கைது செய்யப்பட்ட ருஷ்தி சற்றுமுன் விடுதலை..!கைது செய்த TID அத்தனகல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்தது..இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக தீவிரவாத தடுப்பு சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்ட மொஹமட் ருஷ்டி சற்றுமுன் விடுதலை செய்யப்பட்டதாக அவரின் சகோதரர் மடவளை நியுசுக்கு குறிப்பிட்டார்.கொழும்பில் கடந்த 22 ம் திகதி வணிக வர்த்தக வளாகத்தில் கைது செய்யப்பட அவரை பயங்கரவாத தடுப்பு பிரிவு அத்தனகல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.தனது சகோதரின் நியாயமற்ற தடுத்துவைப்புக்கு எதிராக குரல் கொடுத்த மற்றும் பணியாற்றிய அனைத்து தரப்புக்கும் தான் நன்றி கூறுவதாக குறிப்பிட்டார். PTA – பயங்கரவாத தடைச் சட்டத்ததை நீக்கும் முயற்சி | வாக்குறுதியை நிறைவேற்ற அரசு திட்டம்..!——————————————-பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்வது குறித்து ஆராய்வதற்காக ஒரு குழுவை நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று புதன்கிழமை (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வது மற்றும் புதிய சட்டத்தை உருவாக்குவது குறித்து அரசாங்கம் ஒரு பரந்த ஆலோசனையை மேற்கொள்ளும் என்றார்.