சுமார் 890 அடி விட்டம் கொண்ட, அபாயகரமான சிறுகோள் ஒன்று பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

2008 OS7 பெயரிடப்பட்டுள்ள அந்த சிறுகோள், வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.41 மணிக்கு நமது கிரகத்தை 1,770,000 மைல் தொலைவில் கடந்து செல்லும் என நாசா தெரிவித்துள்ளது.

அபாயகரமான அந்த சிறுகோள், சுமார் 890 அடி விட்டம் கொண்டதாகும்.

என்றாலும், அந்த சிறுகோள் பூமியின்மீது மோதும் அபாயம் இல்லை என நாசா கூறியுள்ளது.

Dr Minjae Kim அறிவியலாளர் இது குறித்துக் கூறும்போது, இந்த சிறுகோள் பூமிக்கு அருகில் வருவதுபோல் தோன்றினாலும், அது பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழையாது என்பதால், அதைக்குறித்து அதிகம் கவலைப்படவேண்டியதில்லை என்கிறார்.

நமது சூரிய அமைப்பில், அபாயகரமானவை என வகைப்படுத்தப்பட்டுள்ள சுமார் 2,350 சிறுகோள்கள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You missed

தேசபந்து தென்னகோன் ஏப்ரல் 10 வரை மீண்டும் விளக்கமறியலில்..!

இன்று(03) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2023 ஆம் வருடம் வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் தேசபந்து தென்னகோனை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில் , 20 நாட்கள் தலைமறைவாக இருந்த பின்னர் மார்ச் 19 ஆம் திகதி அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அதன்படி, சந்தேக நபரான தேசபந்து தென்னகோனை இன்று (03) வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் உத்தரவிட்டிருந்தார்.