Google நிறுவனம் WhatsApp பயன்பாட்டிற்குப் போட்டியாகப் புதிதாக Google Messages என்ற புதிய (Smart phone) ஸ்மார்ட்போன் அப்பை அறிமுகம் செய்துள்ளது. விரைவில் நீங்கள் WhatsApp மற்றும் iMessage போன்ற பயன்பாடுகளுக்குப் பதிலாகக் கூகிள் நிறுவனத்தின் இந்த புதிய Google Messages App பயன்பாட்டை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகிள் Google நிறுவனத்தின் இந்த புதிய மெசேஜிங் பயன்பாட்டில், வாட்சஅப் (WhatsApp) பயன்பாட்டில் உள்ளது போன்ற சில அம்சங்களையும் வழங்கப் போகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. Google ளின் இந்த புதிய முயற்சி நிச்சயம் வாட்ஸ்அப் (WhatsApp) பயன்பாட்டிற்கு மிகப்பெரிய சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பல Android சாதனங்களில் முன்னரே நிறுவப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சத்திற்கு கூகிள் RCS என்று பெயரிட்டுள்ளது.
RCS என்பது Google நிறுவனம் அறிமுகம் செய்துள்ள அதன் மிகப்பெரிய அம்சமாகும். RCS என்பது ரிச் கம்யூனிகேஷன் சர்வீஸ் (Rich Communication Services) என்பதை குறிக்கிறது. இந்த அம்சம் உங்களை WhatsApp போலவே (Multimedia) மல்டிமீடியா மெசேஜ், எச்.டி புகைப்படங்கள், வீடியோக்கள், GIF-கள் மற்றும் தேவையான டாக்குமெண்ட் பைல்-களையும் அனுப்பலாம்.