Facebook நிறுவனத்துக்குச் சொந்தமான WhatsApp (வாட்ஸ்அப்) செயலியை உலகம் முழுவதும் இருக்கும் அதிகலவான மக்கள் பயன்படுத்துகிறார்கள். இதனால் அவ்வப்போது பயனர்களின் வசதிகளுக்காக புதிய அம்சங்களை கொண்டு வந்துகொண்டே இருக்கிறது வாட்ஸ்அப் நிருவனம். அதிலும் குறிப்பாக பயனாளர்கள் விரும்பும் எமோஜி முகங்களைத் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் தற்போது புதிதாக 138 எமோஜிகளை அறிமுகம் செய்துள்ளது.

இந்த அப்டேட் எமோஜிகள் தற்போது பீட்டா வெர்சன் போன்களில் வருகின்றன. மிக விரைவில் அனைத்து ஆன்ட்ராய்டு போன்களிலும் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சமையல் கலைஞர், விவசாயி, ஓவியர் போன்ற பல துறைகளைக் குறிக்கும் எமோஜிகளும் வீல் சேர், இனங்கள் ஆகியவற்றைக் குறிப்பிடும் எமோஜிகளும் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. பீட்டா வெர்ஷன் பயன்படுத்துபவர்கள், தங்கள் வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்வதின் மூலம் இந்த வசதியை பயன்படுத்தலாம்.

இது மட்டுமல்லாது Facebook வீடியோ கால் வசதியான `மெசஞ்சர் ரூம்’ (messenger room) , தற்போது வாட்ஸ்அப் வெப்பிலும் கிடைக்கும் வண்ணம் புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. இது விரைவில் மொபைல் வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 50 பேர் வரை வீடியோ மூலம் பேச முடியும். இதன் விதிமுறைகள் பெரும்பாலும் மாறாமல் அப்படியே உள்ளன. ஒருவருக்கொருவர் கால் அழைப்புகள், வீடியோ அழைப்புகள், குரூப் கால் வசதி மற்றும் குரூப் வீடியோ வசதி ஆகியவற்றை இதில் பயன்படுத்தலாம்.

வாட்ஸ்அப்பில் இருக்கும் இணைப்பு ஐகானை (attachment icon) கிளிக் செய்தால், அதில் பல விருப்ப பட்டியல்கள் இருக்கும் அதில் ஒன்று ரூம், மற்றவை புகைப்படங்கள், கேமரா, ஆவணங்கள் மற்றும் தொடர்புகள். அதில், ரூம் ஐகானை கிளிக் செய்தால் அது உங்களை வாட்ஸ்அப்புக்கு வெளியே மெசஞ்சருக்கு அழைத்துச் செல்லும். அதன் மூலம் ரூம் லிங்க் உருவாக்கி நீங்கள் பேச விரும்பும் நபர்களுக்கு அந்த லிங்கை வாட்ஸ்அப் மூலம் அனுப்பலாம்.

இதில் பேசுவதற்கு நேர வரம்பு கிடையாது. கால் அல்லது வீடியோ மூலம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம். இது தொடக்கம் முதல் இறுதி வரை மிகவும் பாதுகாப்பானதாக உருவாக்கப்பட்டுள்ளது. உங்களால் உருவாக்கப்பட்ட ஒரு ரூமில் புதிய நபர்கள் சேருவதைத் தடுக்க லாக் வசதிகளும் உள்ளன. ரூம் லிங்கை உருவாக்கியவர், எப்போது வேண்டுமானாலும் மீட்டிங்கை முடிக்க முடியும், எந்த நேரத்திலும் எந்த ஒரு பங்கேற்பாளரையும் அவர் அகற்ற முடியும். மெசஞ்சர் ரூம் வசதியை அதிகப்படுத்துவதற்காக இது வாட்ஸ்அப்பிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

By Admin

Leave a Reply