புதிதாக திருமணமானவர்களிடையே விவாகரத்து அதிகரித்து வருவதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலை 2020 ஆம் ஆண்டிலிருந்து அதிகரித்து வருவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மாவட்ட நீதிமன்றங்கள் வழங்கும் விவாகரத்து வழக்குத் தீர்ப்புகளை அவதானிக்கும் போது, ​​

அண்மைக்காலமாக திருமணம் செய்துகொள்பவர்கள் இரண்டு முதல் மூன்று வருட குறுகிய காலப்பகுதியில் விவாகரத்து செய்யும் நிலை காணப்படுவதாக,

பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சிவில் பதிவுத் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகம், சட்டத்தரணி லக்ஷிகா கணேபொல தெரிவித்தார்.

குறிப்பாக அறிவிக்காமல் கைவிட்டு செல்வதே விவாகரத்துக்கான முக்கிய காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

By JF

Leave a Reply

You missed

தேசபந்து தென்னகோன் ஏப்ரல் 10 வரை மீண்டும் விளக்கமறியலில்..!

இன்று(03) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2023 ஆம் வருடம் வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் தேசபந்து தென்னகோனை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில் , 20 நாட்கள் தலைமறைவாக இருந்த பின்னர் மார்ச் 19 ஆம் திகதி அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அதன்படி, சந்தேக நபரான தேசபந்து தென்னகோனை இன்று (03) வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் உத்தரவிட்டிருந்தார்.