அமெரிக்கா வரி விதிப்பை நீக்காவிட்டால் இறுதிவரை போராட தயார் என்று சீனா சூளுரைத்தது

சீனா அதன் 125 விழுக்காட்டு வரி விதிப்பிலிருந்து ஒருசில அமெரிக்க இறக்குமதிகளை நீக்குவது பற்றி யோசித்து வருகிறது. அதற்குத் தகுதிபெறும் பொருள்களின் பட்டியலைத் தரும்படி வர்த்தகங்களிடம் அது கேட்டுள்ளது.

சீன வர்த்தக அமைச்சின் பணிக்குழு ஒன்று வரிகளிலிருந்து விலக்கப்படக்கூடிய பொருள்களின் பட்டியலைச் சேகரிப்பதோடு வர்த்தகங்களும் அவற்றின் சொந்த கோரிக்கைகளைச் சமர்ப்பிக்கும்படி கேட்டுள்ளதாகத் தகவல் அறிந்த வட்டாரம் குறிப்பிட்டது.

வரியிலிருந்து விலக்கப்படக்கூடும் 131 பிரிவுகளில் உள்ள பொருள்களின் பட்டியல் வர்த்தகங்கள், வர்த்தகக் குழுக்கள் ஆகியவற்றுக்கு இடையே சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

சீனா வரிவிலக்கு குறித்து ஆலோசிப்பதாக புளூம்பர்க் செய்தி நிறுவனம் முதலில் தகவல் வெளியிட்டது. அதன் மூலம் உலக நாடுகளை அச்சுறுத்தும் பொருளியல் பாதிப்பு குறித்து அமெரிக்காவைப் போல சீனாவும் கவலைகொண்டிருப்பதைக் காட்டுவதாகக் கருதப்படுகிறது.

இருப்பினும் அமெரிக்கா அதன் வரிகளை நீக்காவிட்டால் இறுதிவரை போராடப் போவதாகவும் சீனா தொடர்ந்து கூறிவருகிறது.

இதற்கிடையே, தென்கொரியாவும் அமெரிக்காவும் புதிய வரிகளை நீக்குவதற்கான இலக்குக் கொண்ட வர்த்தக உடன்பாட்டை வரைய ஒப்புக்கொண்டுள்ளன.

By Admin

Leave a Reply