உலகின் முன்னணி கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டு நாட்களுக்கு முன்பு தனது யூட்யூப் சேனலை அறிமுகம் செய்தார்.

“யுவர் ரொனால்டோ” (UR Ronaldo) சேனல் – https://youtube.com/@cristiano?si=IMs6ShByeBv43aXc

12 மணி நேரத்தில் ஒரு கோடிப் பேர் பின்தொடர்ந்தனர்.

பொதுவாக ஒரு சேனல் பத்து லட்சம் சப்ஸ்கிரைபர்களை பெற்றால்
ஓரிரு மாதங்களில் யூடியூப் நிறுவனம் அந்த சேனலின் உரிமையாளருக்கு தங்கப்பட்டனை அனுப்பி வைக்கும்.

ஆனால், ரொனால்டோவின் சேனல் வெறும் 90 நிமிடங்களில் பத்து லட்சம் சப்ஸ்கிரைபர்களை பெற்ற நிலையில்
அவருக்கு தங்கப்பட்டனை அனுப்பி உள்ளது யூட்யூப்.

முன்னதாக, ரொனால்டோவை யூட்யூப் சேனல் தொடங்கக் கூடாது என முட்டுக் கட்டை போட்டு வந்தது அந்த நிறுவனம்.

அவர் போடும் வீடியோக்களுக்கு குறுகிய நேரத்தில் அதிக பார்வைகள் கிடைக்கும்.
அதனால், கிடைக்கும் விளம்பர வருமானத்தை விட சர்வர் பயன்பாட்டுக்கான செலவுகள் கூடுதாலாக அதிகமாக இருக்கும் என்பதால் யூட்யூப் அவரை சேனல் தொடங்கவிடாமல் முட்டுக் கட்டை போட்டு வந்தது.

சில மாதங்களுக்கு முன்புதான் ரொனால்டோவுக்கு யூட்யூப் பச்சை கொடி காட்டியது.

ஆனால், இத்தனை வேகமாக அவரது சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என யூட்யூப் நிறுவனம் எதிர்பார்க்கவில்லை என கூறப்படுகிறது.

எப்படியும் ரொனால்டோ ஒரே நாளில் பத்து லட்சம் சப்ஸ்கிரைபர்களை பெற்று தங்கப்பட்டனை வெல்வார் என்பதை கணித்து
முன்பே அவருக்கான தங்கப்பட்டனை யூட்யூப் நிறுவனம் தயார் செய்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பை மீறி 12 மணி நேரத்தில் 1 கோடி சப்ஸ்கிரைபர்களை எட்டிவிட்டார் ரொனால்டோ.
விரைவில் ஒரு கோடிக்கான வைர பட்டன் அவருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

தற்போது 24 மணி நேரத்தில் அவரது சேனல் இரண்டு கோடி சப்ஸ்கிரைபர்களையும்,
ஒன்றரை நாளில் மூன்று கோடி சப்ஸ்கிரைபர்களையும் எட்டி உள்ளது.

இத்தனைக்கும் அவரின் சேனலில்
இதுவரை 19 வீடியோக்கள் மட்டுமே பதிவிடப்பட்டுள்ளன.
அந்த வீடியோக்கள் மொத்தமாக 12.1 கோடி பார்வைகளை பெற்று இருக்கிறது.
விரைவில் அவரது சேனல் 100 கோடி பார்வைகளை பெற்றுவிடும்.

Leave a Reply