திருகோணமலை அநுராதபுரச் சந்தியில் வியாழனன்று (2024.10.31) மாலை இரு குழுக்களிடையே இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக காந்திநகர் பகுதியில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.