யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பாடசாலை ஆரம்பமாகும் மற்றும் நிறைவடையும் நேரத்தில் பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே இவ்வாறு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்பதாக பிரதான வீதிகளில் பாடசாலை நேரங்களில் குறித்த கனரக வாகனங்கள் வேகமாகவும் வீதி அபிவிருத்தி சட்டவிதி முறைகளை கருத்தில் கொள்ளாமலும் செல்வதால் மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளுக்காகவும், பின்னர் வீடு செல்லும் போதும் விபத்துக்களை எதிர் நோக்குவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply