2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்ற நடைமுறையை, ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளில் தலையிடாத வகையில் நடைமுறைப்படுத்துவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதற்கமைய, 2025 ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த சேவை அதிகாரிகளின் வருடாந்த இடமாற்ற அறிவிப்பை, பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, சுற்றறிக்கையின் ஊடாக வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான இடமாற்ற சுற்றறிக்கை, நேற்றையதினம் (29) அனைத்து அமைச்சினதும் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், பிராந்திய செயலாளர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

By Admin