Tag: sports news

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய மெய்வல்லுனர்  விளையாட்டு போட்டி!!

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியானது இன்றைய தினம் (03) கொழும்பு மஹிந்த ராஜபக்ஷ தேசிய விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அந்த வகையில் கடந்த மாதம் திருகோணமலை…

திருகோணமலை மூதூர் பகுதியை சேர்ந்த இளைஞர் முஹம்மட் பயாஸ் இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் நடுவராக தெரிவு!!

இங்கிலாந்து கிரிக்கட் சபையின் முதல்தர கௌண்டி கழகங்களில் ஒன்றான Lindfield CC இன் 17 வயது, 19 வயது மற்றும் லெவல் இரண்டு கழகமட்ட போட்டிகளுக்கு 2024…

பாடசாலைகளில் விளையாட்டு நிகழ்வுகளை ஒத்திவைக்குமாறு அறிவித்தல்!

நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக பாடசாலைகளில் விளையாட்டு நிகழ்வுகளை ஒத்திவைக்குமாறு அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இந்தநிலையில் குறித்த அறிவுறுத்தல்களை புறக்கணிக்கும் பாடசாலை…

தி/தி/திரியாய் தமிழ் மகா வித்தியாலயம்
வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி -2024
இறுதி நாள் நிகழ்வுகள்!

வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்றைய தினம் 13.03.2024ம் திகதி புதன் கிழமை பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றிருந்தது.. பாடசலை அதிபர் A.அதிஷ்டலிங்கம் அவர்களின்…

இலங்கை கிரிக்கெட் சபையின் நடுவராக தெரிவு!

பேருவளை அல்-ஹூமைஸரா தேசிய பாடசாலையின் முன்னால் ஆங்கில பாட ஆசிரியரும் மற்றும் தற்போது வாகரை மகா வித்தியாலயத்தில் ஆங்கில பாட ஆசிரியராக கடமையாற்றும் திரு. ஜெயினுதீன் முஹம்மது…

2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரராக லியோனல் மெஸ்ஸி தெரிவு !

2023ஆம் ஆண்டுக்கான FIFA வின் சிறந்த கால்பந்து வீரர் விருதை அர்ஜென்டினா அணியின் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) வென்றுள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளில் தொடர்ந்து மூன்றாவது…

ஓய்வை அறிவித்தார் ஷோன் மார்ஷ்!

அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ஷோன் மார்ஷ் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிமிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஷோன் மார்ஷ் இதுவரை 38 டெஸ்ட் போட்டிகள்,…

இலங்கை VS சிம்பாப்வே முதலாவது டி20 போட்டி இன்று!

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று (14) இடம்பெறவுள்ளது. குறித்த போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது. இந்த…

You missed

15 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம் – மாணவர்கள் உட்பட 7 பேர் கைது..!
————————————————————————

பதினைந்து வயது சிறுமியை (மாணவியை) கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் வழக்கில், மாணவியின் காதலன் என்று கூறப்படும் பாடசாலை மாணவனோடு 5 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 7 பேரை ஹோமாகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், மாணவியுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவி ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி மாணவி, டியூஷன் வகுப்பில் கலந்துகொள்வதாகக் கூறிவிட்டு, தனது காதலனான பாடசாலை மாணவனை சந்திக்கச் சென்றுள்ளார்.

அப்போது, சந்தேக நபரின் காதலன் என்று கூறிக்கொண்ட மாணவன், தனது நண்பர் ஒருவர் வசித்து வந்த ஹோமாகம பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு குறித்த மாணவியை அழைத்துச் சென்று, அங்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அதன்படி, விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலான ஆறு மணி நேரத்திற்குள் வேறு மூன்று வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சந்தேகத்திற்குரிய பாடசாலை மாணவனான காதலன் மற்றும் அவரது நண்பர்களால் கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஹோமாகம பகுதியைச் சேர்ந்த, அதே பகுதியில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் ஆவர்.

கைதானவர்களில் ஐந்து பேர் 15 முதல் 16 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள், மற்ற இருவர் 17 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் பாடசாலை மாணவியை ஏற்றிச் செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 7 சந்தேக நபர்களும் இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.