Tag: குச்சவெளி

இந்தியாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் – மீண்டும் ஒரு சுஜித்

இந்தியாவின் தெலங்கானா மாநிலம் பதஞ்சேரு பகுதியில் வசித்து வருபவர் கோவர்தன் தனது மனைவி மற்றும் 3 வயது மகனுடன் இந்தியாவின் மெடக் மாவட்டத்தில் உள்ள போச்சன்பள்ளி கிராமத்தில்…

அமீரக செய்திகள்

அமீரகத்தில் புதிதாக 883 பேருக்கு கொரோனா – 02 பேர் மரணம்

கொரோனா வைரஸினால் இன்று புதிதாக 883 பேர் பதிப்படைந்துள்ளதாகவும் 389 பேர் பூரண குணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சு இன்று புதன் (27-05-2020) செய்தி…

இனி தேங்காய் சிரட்டையை வீசாதீர்கள்

பியூட்டி கிரீம், ஹேர் டை, குளியல் சோப்பு உள்ளிட்ட முக்கிய பொருற்களை தயாரிக்கும் மூலப்பொருளாக தேங்காய் சிரட்டையானது திகர்கிறது. இது இந்தியாவின் விருதுநகரில் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட…

கடலை மாவு கரி சாப்பிட்டிருக்கீங்களா? இனி அடிக்கடி செஞ்சு சாப்பிடுவீங்க…

சுவையான உணவைத் தேடி உண்ணும் பழக்கம் நம்மில் பலருக்கு இருந்தாலும், ஆரோக்கியமான உணவையும் தேடித் தேடி உண்பவர்கள் உண்டு. அவரை உணவு சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தால் அதனை…

ஐக்கிய அரபு அமீரகத்தில் இஸ்லாத்தை கொச்சைப்படுத்திய 3 இந்தியர்களுக்கு வேலை பறிப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) வேலைபார்க்கும் இந்தியர்கள் 3 பேர் இஸ்லாம் குறித்து அவதூறாக (Social Media) சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவிட்டதைத் தொடர்ந்து அவர்கள் வேலையிலிருந்து…

தி/அந்நூரியா கனிஷ்ட பாடசாலை இல்ல விளையாட்டுப்போட்டி 2020

தி/அந்நூரியா கனிஷ்ட பாடசாலை இல்லா விளையாட்டுப்போட்டி இன்று 17/02/2020 அதிபர் M.k.முபீன் அவர்களின் தலைமையில் வெகு விமசையாக இடம் பெற்றது

You missed

15 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம் – மாணவர்கள் உட்பட 7 பேர் கைது..!
————————————————————————

பதினைந்து வயது சிறுமியை (மாணவியை) கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் வழக்கில், மாணவியின் காதலன் என்று கூறப்படும் பாடசாலை மாணவனோடு 5 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 7 பேரை ஹோமாகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், மாணவியுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவி ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி மாணவி, டியூஷன் வகுப்பில் கலந்துகொள்வதாகக் கூறிவிட்டு, தனது காதலனான பாடசாலை மாணவனை சந்திக்கச் சென்றுள்ளார்.

அப்போது, சந்தேக நபரின் காதலன் என்று கூறிக்கொண்ட மாணவன், தனது நண்பர் ஒருவர் வசித்து வந்த ஹோமாகம பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு குறித்த மாணவியை அழைத்துச் சென்று, அங்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அதன்படி, விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலான ஆறு மணி நேரத்திற்குள் வேறு மூன்று வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சந்தேகத்திற்குரிய பாடசாலை மாணவனான காதலன் மற்றும் அவரது நண்பர்களால் கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஹோமாகம பகுதியைச் சேர்ந்த, அதே பகுதியில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் ஆவர்.

கைதானவர்களில் ஐந்து பேர் 15 முதல் 16 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள், மற்ற இருவர் 17 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் பாடசாலை மாணவியை ஏற்றிச் செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 7 சந்தேக நபர்களும் இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.