உலகத்தையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் காரணமாக உலகெங்கும் மக்களை பாதுகாக்கும் நோக்கில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் அதிகமான கடைகள் மூடப்பட்டன. மேலும் விளையாட்டுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும் இந்த வருடம் ஆஸ்திரேலியா வில் T20 உலகக் கோப்பை நடைபெற இருந்தது. ஆனால் அங்கு கொரோனா வைரஸினால் 6,400பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 61பேர்கள் உயிரிழந்துள்ளனர். இதனைக் கருத்தில் கொண்ட ஆஸ்திரேலியா அரசாங்கம் செப்டம்பர் 30ம் திகதி வரை ஆஸ்திரேலியாவின் அனைத்து எல்லைகளுக்கும் சீல் வைத்தது.

ஆஸ்திரேலியாவுக்கு செப்டம்பர் 30ம் திகதி வரை எந்த விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளும் இல்லை. ஆனால் T20 உலகக் கோப்பையை காலி மைதானத்தில் நடத்துவதற்கு ஆஸ்திரேலியா சி.ஏ திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகின.

இது குறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் கேப்டன் அலன் போடர் (Allan Border) கூறியதாவது: ரசிகர்கள் இல்லாமல் ஒரு போட்டியா? அதுவும் உலகக் கோப்பை ரசிகர்கள் இல்லாமல் நடப்பதை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்று கூறினார்.

மேலும் கூறுகையில் பார்வையாளர்களை மைதானத்திற்கு உள்ளே அனுமதிக்கவில்லை என்றால் போட்டிகளை நடத்துவதற்கான தேவையே இல்லை என்றும் கூறினார்.

Leave a Reply