தி/ அந் – நூரியா கனிஷ்ட பாடசாலையின் மாணவர்கள் குடிப்பதற்கோ அல்லது மலசல கூடத்தை பாவிப்பதற்கோ நீர் இல்லால் சுமார் 12 நாட்களாக இருந்துள்ளனர்.

இது போன்ற நீர் பிரச்சினை அடிக்கடி அப் பாடசாலைக்கு ஏற்படுவதுண்டு. இதை அவதானித்த அப்பாடசாலை பிள்ளைகளின் பெற்றோர்கள் KVC இன் ஊடகவியலாளரைத் தொடர்பு கொண்டு இப்பிரச்சினைகள் தொடர்பாக தெரிவித்தனர்.

உடனடியாக அவ்விடத்திற்குச் சென்ற KVC இன் ஊடகவியலாளரான A. A. றிஸ்மின் குச்சவெளி பிரதேச சபையின் செயலாளர் திரு. வெ. இராஜசேகர் அவர்களை தொடர்புகொண்டு பாடசாலையின் பிரச்சினைகள் பற்றி கூறிய போது துரிதமாக அவ்விடத்திற்கே வந்து நேரடியாக அதனைப் பார்வையிட்டு தற்காலிகத் தீர்வாக உடனடியாக அவ்விடத்திற்கு பிளாஸ்டிக் நீர் தாங்கி ஒன்றினைப் பெற்றுத் தருவதுடன் அந்த தாங்கியில் தினந்தோறும் பிரதேச சபையின் நீர் நிரப்பும் வாகனம் அவ்விடத்திற்கே வந்து நீர் நிரப்பப்படும் எனவும் கூறினார்.

குச்சவெளி பிரதேச சபையின் செயலாளர் திரு.வெ.இராஜசேகர் அவர்களுக்கு பெற்றோர்கள், ஆசிரியர்ள் மற்றும் KVC Media சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

A. A. றிஸ்மின்

Leave a Reply

You missed

தேசபந்து தென்னகோன் ஏப்ரல் 10 வரை மீண்டும் விளக்கமறியலில்..!

இன்று(03) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2023 ஆம் வருடம் வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் தேசபந்து தென்னகோனை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில் , 20 நாட்கள் தலைமறைவாக இருந்த பின்னர் மார்ச் 19 ஆம் திகதி அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அதன்படி, சந்தேக நபரான தேசபந்து தென்னகோனை இன்று (03) வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் உத்தரவிட்டிருந்தார்.