மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் உள ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி இன்று (11) மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் தி/ இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி மைதானத்தில்  நடைபெற்றது.

இந்நிகழ்வில் தம்பலகாமம், மூதூர், கிண்ணியா, கந்தளாய், பட்டினமும் சூழலும், வெருகல், கோமரன்கடவல குச்சவெளி, சேருவில பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள சகன செவன அமைப்பின் மாற்றுதிறனாளிகள் மற்றும் பட்டினமும் சூழலும் பிரதேசத்தில் உள்ள Hope நிறுவனத்தின் மாற்றுதிறனாளிகள் பங்கு பற்றியதுடன் அவர்களினால் இயலுமையுடைய அனைத்து போட்டி நிகழ்ச்சிகளிலும் இதன்போது பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது பங்குபற்றி போட்டிகளில் வெற்றியீட்டிய மாற்றுதிறனாளிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் சமூக சேவைகள் மாவட்ட இணைப்பாளர் த.பிரணவன்,  பிரதேச செயலக சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சமூகசேவை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply