பாடசாலை மாணவிகளுக்கான சுகாதாரத் துவாய்களை இலவசமாக வழங்குவதற்காக, கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையின் சகல பாடசாலைகளிலும் சுமார் 4மில்லியன் மாணவ மாணவிகளின் கல்வி பயிலுவதுடன், அதில் 1.2 மில்லியன் மாணவிகள் கல்வி கற்கின்றனர். அம்மாணவிகளில் அதிக கஷ்டப் பாடசாலைகள், கஷ்டப் பிரதேச பாடசாலைகள், தோட்டப்பாடசாலைகள் மற்றும் வறுமைக் கோட்டில் வாழும் மாணவ மாணவிகளுடனான நகரப் பாடசாலைகளில் எட்டு இலட்சம் வரையான மாணவிகள் காணப்படுகின்றனர்.

அவர்களுக்கு 2024 ஏப்ரல் மாதத்திலிருந்து நடைமுறைக்கு வரும் விதமாக வருடாந்தம் சுகாதாரத் துவாய்களை இலவசமாக வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply