சவூதி அரேபிய அரசாங்கத்தினால் இலங்கை அன்பளிப்பா வழங்கப்பட்ட பேரீத்தம்பங்களை நாட்டு முஸ்லிம் பள்ளிவாயல்களுக்கு உத்தியோகபூர்வமாக வழங்கும் நிகழ்வு புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரநாயகவின் தலைமையில் புத்தசாசன அமைச்சில் (11) நேற்று இடம்பெற்றது.
இதன்போது கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள மூன்று முஸ்லிம் பள்ளிவாயல்களுக்கு இன்று (12) இவ்வாறு உத்தியோகபூர்வமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டது.
நாட்டில் 2500 பதிவு செய்யப்பட்ட பள்ளிவாயல்கள் காணப்படுவதுடன் ஒவ்வொரு பள்ளிக்காகவும் தலா 20 கிலோ அளவிலான பேரீத்தம்பழங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதற்கு முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போது சில மாவட்டங்களுக்கான பேரீத்தம் பழங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதுடன் இன்று மற்றும் நாளைய தினங்களுக்குள் ஏனைய மாவட்டங்களுக்கான பழங்களை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் பணிப்பாளர் இஸட். ஏ. எம். பைஸால் மற்றும் திணைக்கள அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.