ப்சம் உப்பு பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. உடல் நலத்தை பாதுகாப்பது மட்டுமின்றி, சரும பாதுகாப்பிற்கும் முடி ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. மன அழுத்தம், பதற்றத்தையும் குறைக்கிறது.

எப்சம் உப்பு என்பது மெக்னீசியம் சல்பேட்டின் இன்னொரு பெயராகும். நாம் உண்ணும் உணவில் தேவையான அளவு மெக்னீசியம் சத்து நமக்குக் கிடைப்பதில்லை. இது டேபிள் சால்ட் போல் அல்லாமல் கசப்பான சுவை கொண்டது. எனவே, இதை உணவில் சேர்த்து உண்ணக்கூடாது. இதை நீரில் கலந்து குளிக்கலாம். அது உடலுக்கு தேவையான அளவு ஆரோக்கியத்தைத் தருகிறது.

எப்சம் உப்பின் பயன்கள்:

தசை வலிக்கு சிறந்த நிவாரணம்: உடலில் மெக்னீசியம் குறைபாடு உள்ளவர்களுக்கு தசைப்பிடிப்பு, உடல் வலி மற்றும் வீக்கம் ஏற்படும். இவர்கள் ஒரு பக்கெட் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் எப்சம் உப்பு சேர்த்து கரைத்து அந்த தண்ணீரில் குளித்து வந்தால் தசை வலிகளில் இருந்து நிவாரணம் பெறலாம். மூட்டு வலி மற்றும் பாத வலி இருப்பவர்கள் எப்சம் உப்பு சேர்க்கப்பட்ட வெதுவெதுப்பான நீரில் கால்களை சிறிது நேரம் ஊற வைத்தால் பாத வலி மற்றும் கால் வலி சரியாகும். விளையாட்டு வீரர்கள் தங்கள் தசைகளில் சுளுக்கு பிடித்துக் கொண்டால் எப்சம் உப்பு கலந்த நீரை உபயோகித்து நிவாரணம் பெறுகிறார்கள்.

நச்சு நீக்கி: எப்சம் உப்பில் உள்ள சல்பேட்டுகள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஒரு பக்கெட் வெதுவெதுப்பான தண்ணீரில் இரண்டு மூன்று ஸ்பூன் எப்சம் உப்பு கலந்து அந்த தண்ணீரில் குளிக்கும்போது உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் அசுத்தங்கள் வெளியேறி சரும புத்துணர்ச்சி பெறுவதோடு, பளபளப்பான சருமம் கிடைக்கும்.

சரும அழகை மேம்படுத்துகிறது: வறண்ட சருமம் உள்ளவர்கள் எப்சம் உப்பு குளியலை வாரத்தில் மூன்று நாட்கள் மேற்கொண்டால் சருமம் பளபளப்பாகும். ஈரப்பதம் அதிகரிக்கும். மேலும் பலவிதமான சருமம் சார்ந்த பிரச்னைகளுக்கு இயற்கையான தீர்வாக அமைகிறது. இது சருமத்தின் இறந்த செல்களை அகற்றி மேல் சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைக்கிறது. அதோடு, சரும எரிச்சலை தணிக்கவும் வீக்கத்தை குறைக்கவும் சரும அழற்சி போன்றவற்றை குணமாக்கவும் உதவுகிறது.

தலை முடி ஆரோக்கியம்: தலையில் உள்ள அழுக்கு மற்றும் பொடுகு பிரச்னையை சரி செய்கிறது. சிறிதளவு நீருடன் ஹேர் கண்டிஷனர் மற்றும் ஒரு ஸ்பூன் எப்சம் உப்பு மூன்றையும் கலந்து உச்சந்தலையில் தடவி 20 நிமிடங்கள் கழித்து தலை முடியை அலச தலை முடி பட்டுப்போல பிரகாசிக்கும்.

மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்கிறது: எப்சம் உப்பு உடலுக்கு ஆரோக்கியத்தை மட்டும் வழங்காமல் மனம் சார்ந்த பிரச்னைகளையும் சரி செய்கிறது. எப்சம் உப்பு குளியலை அடிக்கடி மேற்கொண்டால் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைகிறது. மனம் அமைதி பெறுகிறது. நரம்புகளை அமைதிப்படுத்தி தளர்வாக்கி ஆழ்ந்த தூக்கத்திற்கு வழி வகுக்கிறது.

By JF

Leave a Reply