இலங்கை மக்கள் தமது புகைப்படத்துடன் கூடிய முத்திரையை அச்சிட்டு பயன்படுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார்.

தனியார் வர்த்தக வங்கி ஒன்றின் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இன்று (06) காலை நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்ட போதே தபால் மா அதிபர் இதனை கூறியுள்ளார்.

இரண்டாயிரம் ரூபாய்க்கு 20 முத்திரைகள் வழங்கப்படும் என்றும், தபால் தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிறந்த நாள், திருமண படம் போன்றவற்றை முத்திரையில் பதிக்கலாம் என்றும், இது பொதுவாக தபால் தலையாக பயன்படுத்தப்படலாம் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply