2024.06.12 அகம் மனிதபிமான வள நிலையம் அமைப்பின் இணைப்பாளர் கண்டுமணி லவகுலசராசா தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இச்செயலமர்வு இடம்பெற்றது.

இதில் மூத்த ஊடகவியலாளர்கள் மற்றும் இளம் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஜனநாயகப் பங்குதாரர்களுக்கான ஓர் அரங்கத்தை உருவாக்குதல் என்னும் செயற்றிட்டத்தில் உள்ளூர் ஊடகவியலாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், மக்கள் ஆகிய மூன்று ஜனநாயக பங்குதாரர்களுக்கான ஓர் அரங்கத்தை உருவாக்கி அதன் ஊடாக பொறுப்புக்கூறுதல், வெளிப்படைத்தன்மையை நிலைநாட்டுவது தொடர்பாகவும், பிரதேசபை உறுப்பினர்களின் கடமைப் பொறுப்புகள், ஊடகவியலாளர்களின் கடமை பொறுப்புகள், மக்களின் கடமை பொறுப்புகள் என்பன தொடர்பாகவும் தெளிவு படுத்தப்பட்டது.

#AHRC #Aham #Batticaloa #journalist #workshop #DANNEWS #KVCMedia #Trincomalee #SriLanka

Leave a Reply