Latest Post

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரினால் பாடுபாடு மீன் சந்தை திறந்துவைப்பு!! PTA – பயங்கரவாத தடைச் சட்டத்ததை நீக்கும் முயற்சி | வாக்குறுதியை நிறைவேற்ற அரசு திட்டம்..!
——————————————-
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்வது குறித்து ஆராய்வதற்காக ஒரு குழுவை நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று புதன்கிழமை (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வது மற்றும் புதிய சட்டத்தை உருவாக்குவது குறித்து அரசாங்கம் ஒரு பரந்த ஆலோசனையை மேற்கொள்ளும் என்றார்.
டிரம்பின் அறிவிப்பால் 43,500 கோடி ரூபாவை இழந்த கொழும்பு பங்குச் சந்தை!
——————————————————————–
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி அறிமுகப்படுத்திய புதிய இறக்குமதி வரி கொள்கைகள், தற்போது உலகளாவிய பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக, உலகம் முழுவதும் பல பங்கு சந்தைகள் பெரும் சரிவை சந்தித்துள்ள நிலையில், ஆசியாவில் உள்ள பல பங்கு சந்தைகளும் இதனால் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன.

நிலவும் சூழலில், இலங்கையின் ஒரே பங்கு சந்தையான கொழும்பு பங்கு சந்தையும் ஜனாதிபதி ட்ரம்பின் இந்த முடிவின் பலியாக மாறியுள்ளது. இந்த முடிவு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக மூன்று வர்த்தக நாட்களாக கொழும்பு பங்குச் சந்தை பெரும் சரிவை சந்திக்க நேர்ந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி வர்த்தக முடிவில் கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 16,007.44 புள்ளிகளாக பதிவாகியிருந்த நிலையில், நேற்றைய (07) வர்த்தக முடிவில் அது 14,660.45 புள்ளிகளாக பெரும் சரிவை பதிவு செய்துள்ளது. அதாவது, இந்த மூன்று வர்த்தக நாட்களில் மட்டும் 1,346.99 புள்ளிகள், அல்லது 8.41% சதவீதம் கொழும்பு பங்கு சந்தை சரிந்துள்ளது.

இதற்கிடையில், ஏப்ரல் 02 ஆம் திகதி வரை 5,688.56 பில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்த கொழும்பு பங்கு சந்தையின் மொத்தப் புரள்வு, நேற்றைய நிலவரப்படி 5,253.18 பில்லியன் ரூபாயாக குறைந்துள்ளது. இந்த மூன்று நாட்களில் மட்டும் 435.37 பில்லியன் ரூபாய், அதாவது 43,537 கோடி ரூபாய், கொழும்பு பங்கு சந்தையிலிருந்து இழக்கப்பட்டுள்ளது.

இதில், நேற்று ஒரு நாளில் மட்டும் பங்கு சந்தையில் இழந்த மதிப்பு 227 பில்லியன் ரூபாயாகும்.

இது ஒரு பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டியமைக்காக கைது செய்யப்பட்ட ருஷ்தி சற்றுமுன் விடுதலை..!

கைது செய்த TID அத்தனகல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்தது..

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக தீவிரவாத தடுப்பு சட்டத்தில்  தடுத்து வைக்கப்பட்ட மொஹமட் ருஷ்டி சற்றுமுன் விடுதலை செய்யப்பட்டதாக அவரின் சகோதரர் மடவளை நியுசுக்கு குறிப்பிட்டார்.

கொழும்பில் கடந்த 22 ம் திகதி வணிக வர்த்தக வளாகத்தில் கைது செய்யப்பட அவரை பயங்கரவாத தடுப்பு பிரிவு அத்தனகல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

தனது சகோதரின் நியாயமற்ற தடுத்துவைப்புக்கு எதிராக   குரல் கொடுத்த மற்றும் பணியாற்றிய அனைத்து தரப்புக்கும் தான் நன்றி கூறுவதாக குறிப்பிட்டார்.
சம்பூர் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்திற்கான பணி ஆரம்பித்து வைப்பு!!

கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான ஆளுமை விருத்தி இருநாள் பயிற்சி செயலமர்வு!!!!

2024.06.12 அகம் மனிதபிமான வள நிலையம் அமைப்பின் இணைப்பாளர் கண்டுமணி லவகுலசராசா தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இச்செயலமர்வு இடம்பெற்றது. இதில் மூத்த ஊடகவியலாளர்கள் மற்றும் இளம் ஊடகவியலாளர்கள்…

லண்டன் OTHM நிறுவன பிரதானி மற்றும் ஸ்ரீலங்கா மெட்டோபொலிடன் கல்லூரி தலைவர் சந்திப்பு!

லண்டன் Organization for Tourism and Hospitality Management நிறுவன பிரதானி அன்ரிவ் றேனி மற்றும் ஸ்ரீலங்கா மெட்ரோபொலிடன் நிறுவன ஸ்தாபக தலைவர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப்…

பாடசாலைகளுக்கு பிரதி அச்சிடும் இயந்திரம் வழங்கிவைப்பு – A.L.M.அதாவுல்லா MP

2024.06.11 நடைபெற்ற குச்சவெளி அபிவிருத்தி குழு கூட்டத்தில், புல்மோட்டையில் இரண்டு பாடசாலைக்கும், நிலாவெளியில் ஒரு பாடசாலைக்கும் பிரதி அச்சிடும் இயந்திரம் A.L.M. அதாவுல்லா,M.P,DCC Chairman அவர்களால் வழங்கி…

இன்றிலிருந்து (03.06.2024) மேல்மாகாணம் தவிர்ந்த ஏனைய 08 மாகாணங்களுக்குமான வருடாந்த வாகன அனுமதிப்பத்திரம் (Revenue licence) கிழக்கு மாகாணத்திலுள்ள எந்தவொரு பிரதேச செயலகத்திலும் பெற்றுக்கொள்ள முடியும்.

கிழக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களம்

பரீட்சைப் பெறுபேறுகளும் மாணவர்களின் தரவுப் பாதுகாப்பும்

– Dr. ஜே.டி. கரீம்தீன் (Phd in Edu.) பரீட்சை முடிவுகளை வெளியிட்டுக் கொண்டாடும் சில பாடசாலைகள்,சில நிறுவனங்கள் மாணவர்களின் Privacy மற்றும் தரவு பாதுகாப்பு தொடர்பான…

திருகோணமலை,மூதூர் புதிய இறங்கு துரை வீதிக்கு அருகில் உள்ள களப்பு கடலில் மூழ்கி 8 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது மூதூர் அக்கரைச்சேனை பகுதியை சேர்ந்த இர்ஃபான் முஹம்மட் இஃபாம் எனும் 8 வயது சிறுவனே இப்படி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுவனின்…

விலை குறைப்பு

மாதாந்தம் எரிபொருள்களின் விலை சூத்திரத்தின்படி, எரிபொருளின் விலையில் இன்று (31) இரவு திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இலங்கை ரூபாவின் பலம் & உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை…

கருத்துகளும் அதனைப் புரிந்துகொள்ளுதலும்

மனித அறிவின் அடிப்படை தூண்கள் இரண்டு: கருத்துகள் எவ்வாறு தோன்றுகின்றன. கருத்துகள் நமது அனுபவங்கள், கல்வி, கலாசாரம் மற்றும் நம்பிக்கைகள் மூலம் உருவாக்கப்படுகின்றன. கருத்துகள் உண்மையானவை, தவறானவை,…

கிழக்கு மாகாணப் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

மேற்படி நியமனம் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 2024.05.28 ஆந்திகதி இடம்பெற உள்ளதாக கிழக்கு மாகாணக் கல்விச்செயலாளார் H.E.M.W.G.திஸாநாயக்க தெரிவித்துள்ளர். .

ஒரே தடவையில் 4 குழந்தைகள்!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் முதற்தடவையாக ஒரே கருவில் தாயொருவர் நான்கு சிசுக்களை ஆரோக்கியமாக பிரசவித்துள்ள சம்வம் இடம்பெற்றுள்ளது . மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த கரிகரன் கிருஸ்ணவேணி…

LPL – 2024 அணியொன்றின் உரிமையாளர் கைது!

ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் லங்கா ப்ரீமியர் லீக் அணியொன்றின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியக் குடியுரிமையைக் கொண்டுள்ள பங்களாதேஷ் நாட்டவரான அவர் கட்டுநாயக்க விமான…

பல்கலைக்கழக நடவடிக்கைகள் முடக்கம்

நாட்டில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பல்கலைக்கழக மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. பல்கலைக்கழக கல்விசாரா தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள தொடர் வேலைநிறுத்தம்…

You missed

PTA – பயங்கரவாத தடைச் சட்டத்ததை நீக்கும் முயற்சி | வாக்குறுதியை நிறைவேற்ற அரசு திட்டம்..!