Latest Post

திருமலையில் காணிகளை விடுவிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்!! தெஹிவளையில் உள்ள மசூதியை மூடுவது தொடர்பாக UDA உடனான 10 ஆண்டுகால சட்டப் போராட்டம் முடிவுக்கு வருகிறது! புதிய குறும்படம் “குச்சவெளி” என பெயரிடப்பட்டுள்ளது!! 15 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம் – மாணவர்கள் உட்பட 7 பேர் கைது..!
————————————————————————

பதினைந்து வயது சிறுமியை (மாணவியை) கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் வழக்கில், மாணவியின் காதலன் என்று கூறப்படும் பாடசாலை மாணவனோடு 5 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 7 பேரை ஹோமாகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், மாணவியுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவி ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி மாணவி, டியூஷன் வகுப்பில் கலந்துகொள்வதாகக் கூறிவிட்டு, தனது காதலனான பாடசாலை மாணவனை சந்திக்கச் சென்றுள்ளார்.

அப்போது, சந்தேக நபரின் காதலன் என்று கூறிக்கொண்ட மாணவன், தனது நண்பர் ஒருவர் வசித்து வந்த ஹோமாகம பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு குறித்த மாணவியை அழைத்துச் சென்று, அங்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அதன்படி, விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலான ஆறு மணி நேரத்திற்குள் வேறு மூன்று வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சந்தேகத்திற்குரிய பாடசாலை மாணவனான காதலன் மற்றும் அவரது நண்பர்களால் கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஹோமாகம பகுதியைச் சேர்ந்த, அதே பகுதியில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் ஆவர்.

கைதானவர்களில் ஐந்து பேர் 15 முதல் 16 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள், மற்ற இருவர் 17 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் பாடசாலை மாணவியை ஏற்றிச் செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 7 சந்தேக நபர்களும் இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
தேசபந்து தென்னகோன் ஏப்ரல் 10 வரை மீண்டும் விளக்கமறியலில்..!

இன்று(03) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2023 ஆம் வருடம் வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் தேசபந்து தென்னகோனை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில் , 20 நாட்கள் தலைமறைவாக இருந்த பின்னர் மார்ச் 19 ஆம் திகதி அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அதன்படி, சந்தேக நபரான தேசபந்து தென்னகோனை இன்று (03) வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

அத்துமீறி அபகரிக்கப்படும் காணிகள் !! – குச்சவெளி பிரதேசம்

திருகோணமலை, குச்சவெளி, இலந்தைக்குளம் பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான வயல் காணிகள் துப்புரவு செய்யப்படுவதால் இன்று (26) பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலந்தைக்குளம் 5ஆம்…

முறைப்படி இடமாற்றங்களை மேற்கொள்வதில் ஆட்சேபனை இல்லை – தேர்தல்கள் ஆணைக்குழு!

2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்ற நடைமுறையை, ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளில் தலையிடாத வகையில் நடைமுறைப்படுத்துவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கமைய, 2025…

SMART SCHOOLS!!       

SMART SCHOOLS!! எதிர்வரும் சில மாதங்களில் நாடு முழுவதும் உள்ள முன்னணிப் பாடசாலைகள் 1250ஐ ஸ்மார்ட் பாடசாலைகளாக அபிவிருத்தி செய்து, அவற்றை ஒரே வலையமைப்பின் கீழ் கல்வி…

அதிபர்,ஆசிரியர்களின் அதிரடி முடிவு!

. ஜுலை 22 இலிருந்து இரண்டு வாரங்களுக்கு சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இதன்படி, பாடசாலைகளுக்கு…

பழங்கள் மற்றும் மறக்கறிகளின் விலையில் வீழ்ச்சி..!

பேலியகொட மெனிங் சந்தையில் மரக்கறி விலைகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, மொத்த விலையில் கேரட் கிலோ ஒன்று 150 ரூபாவாகவும், போஞ்சி கிலோ 250 ரூபாவாகவும், கத்தரிக்காய்…

fire accident அக்குரணை உணவகத்தில் தீ விபத்து..!

அக்குரணை உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்திற்கு கட்டிடத்தின் பேக்கரியில் உள்ள மின்சார அடுப்புகளுக்கு, மின்சாரம் வழங்கும் அமைப்பில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இருக்கலாம் என பொலிஸார்…

திருகோணமலை,மூதூர் பொலிஸ் பிரிவின் கிளிவெட்டி பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து இன்று யுவதியொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது!!

குறித்த யுவதி கொலை செய்யப்பட்டு கிணற்றினுள் போடப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது. பாழடைந்த கிணற்றில் சடலமொன்று கிடப்பதாக மூதூர் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அகழ்வு செய்வதற்காக மூதூர்…

ஆளுநர் வழங்கும் ஒருங்கிணைப்பாளர்
பதவிகளை பொறுப்பேற்க வேண்டாம்!!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கடந்த உள்ளுராட்சி மன்றங்களில் தவிசாளர் மற்றும் மேயர் பதவி வகித்தவர்கள் ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கு அமைய கிழக்கு மாகாண ஆளுநரினால்…

இன்றைய வானிலை அறிவிப்பு..!

நாட்டில் இன்று மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா…

ஆரம்பக் கல்வி பிரிவுக்கான அலகு திறந்து வைப்பு

இன்று 2024.07.01 கிண்ணியா வலயக்கல்வி அலுவலகத்தில் ஆரம்பக்கல்வி அபிவிருத்திக்கான அலகு வலயக்கல்விப்பணிப்பாளர் Mrs.ZMM.நளீம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

தி/அந் நூரியா முஸ்லிம் மகா வித்தியாலய பாடசாலை விளையாட்டு மைதான மண்டப புணர் நிர்மாணம்!!

குச்சவெளி பிரதேச அபிவிருத்திக் குழு தலைவர் A. L. M. அதாவுல்லா அவர்களினால் 5 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது அதற்கான வேலைத்திட்டம் நடைபெற்று வருகிறது.…

ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக ஜனாதிபதி அறிவிப்பு…!

ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படும் என அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரரிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,…

திருகோணமலை மூதூர் பகுதியை சேர்ந்த இளைஞர் முஹம்மட் பயாஸ் இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் நடுவராக தெரிவு!!

இங்கிலாந்து கிரிக்கட் சபையின் முதல்தர கௌண்டி கழகங்களில் ஒன்றான Lindfield CC இன் 17 வயது, 19 வயது மற்றும் லெவல் இரண்டு கழகமட்ட போட்டிகளுக்கு 2024…

கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான ஆளுமை விருத்தி இருநாள் பயிற்சி செயலமர்வு!!!!

2024.06.12 அகம் மனிதபிமான வள நிலையம் அமைப்பின் இணைப்பாளர் கண்டுமணி லவகுலசராசா தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இச்செயலமர்வு இடம்பெற்றது. இதில் மூத்த ஊடகவியலாளர்கள் மற்றும் இளம் ஊடகவியலாளர்கள்…

லண்டன் OTHM நிறுவன பிரதானி மற்றும் ஸ்ரீலங்கா மெட்டோபொலிடன் கல்லூரி தலைவர் சந்திப்பு!

லண்டன் Organization for Tourism and Hospitality Management நிறுவன பிரதானி அன்ரிவ் றேனி மற்றும் ஸ்ரீலங்கா மெட்ரோபொலிடன் நிறுவன ஸ்தாபக தலைவர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப்…

பாடசாலைகளுக்கு பிரதி அச்சிடும் இயந்திரம் வழங்கிவைப்பு – A.L.M.அதாவுல்லா MP

2024.06.11 நடைபெற்ற குச்சவெளி அபிவிருத்தி குழு கூட்டத்தில், புல்மோட்டையில் இரண்டு பாடசாலைக்கும், நிலாவெளியில் ஒரு பாடசாலைக்கும் பிரதி அச்சிடும் இயந்திரம் A.L.M. அதாவுல்லா,M.P,DCC Chairman அவர்களால் வழங்கி…

You missed

15 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம் – மாணவர்கள் உட்பட 7 பேர் கைது..!