2020 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பிடும் முதல் கட்ட பணி நாளை (27) ஆரம்பமாகவுள்ளது.
நாட்டிலுள்ள 86 பாடசாலைகள் மற்றும் 111 மத்திய நிலையங்கள் இதற்காக ஏற்பாடு செய்திருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
இந்த முதற்கட்ட பணிகள் நாளை 27 ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 05 ஆம் திகதி வரையில் நடைபெறும். நாட்டில் 57 நகரங்களில் இந்த மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.