இன்றைய தினம் இளைஞர் படையணி பயிற்சி நிர்வாகத்தினரால் குச்சவெளி சலப்பயாறு கிராமத்தில் இயங்கி வரும் அறிவுத் துளிர் பாலர் பாடசாலைக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இளைஞர் படையணியின் பொறுப்பு அதிகாரி Maj. MSM. மிப்ராஸ்கான் (Officer In-Charge) மற்றும் சிறப்பு விருந்தினராக குச்சவெளி பிரதேச செயலகத்தின் செயலாளர் குணணாதன் (DS – Kuchchaveli) அவர்களும்.

மேலும் சலப்பயாறு வடக்கு GS, அறிவுத் துளிர் பாலர் பாடசாலையின் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், இளைஞர் படையணி பயிற்சி மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

You missed

தேசபந்து தென்னகோன் ஏப்ரல் 10 வரை மீண்டும் விளக்கமறியலில்..!

இன்று(03) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2023 ஆம் வருடம் வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் தேசபந்து தென்னகோனை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில் , 20 நாட்கள் தலைமறைவாக இருந்த பின்னர் மார்ச் 19 ஆம் திகதி அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அதன்படி, சந்தேக நபரான தேசபந்து தென்னகோனை இன்று (03) வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் உத்தரவிட்டிருந்தார்.