உலக வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை  தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைவதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம் எஸ் தௌபீக் அவருடைய பெருநாள் வாழ்த்து அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதில் குறிப்பிடுகையில்,

புனித ரமழான் நோன்பை நோற்று நல்லமல்களில் விழித்திருந்து வணங்கி இன்று பெருநாளை அடைந்திருக்கிறோம். இறை அச்சத்தோடு இவ்வருட நோன்பை எதிர்கொண்டு, நமது ஈமானை இந்த மாதத்தில் பலப்படுத்திக் கொண்டோம்.

பலப்படுத்திக் கொண்ட உள்ளங்களை இன்றைய தினத்தோடு விட்டுவிடாது வாழ்நாள் பூராகவும் செயற்படுத்திக் கொள்ள முயற்சி செய்வதோடு, ஏழை எழியோருக்கு முடியுமான உதவிகளை வழங்குவோம்.

அதேபோன்று பலஸ்தீனில் எமது உடன்பிறப்புக்கள் படும் இன்னல்களை புரிந்து,  அவர்களின் சுபீட்சத்திற்காகவும் அங்கு நிரந்தர அமைதி நிலவவும் இறைவனிடம் இரு கரம் ஏந்தி பிரார்த்திப்போம்.

உலகு எங்கும் சமத்துவமும், சகோதரத்துவமும் மேலோங்கட்டும் என பிரார்த்தித்தவனாக உலக வாழ் அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும் எனது நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

Leave a Reply

You missed

15 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம் – மாணவர்கள் உட்பட 7 பேர் கைது..!
————————————————————————

பதினைந்து வயது சிறுமியை (மாணவியை) கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் வழக்கில், மாணவியின் காதலன் என்று கூறப்படும் பாடசாலை மாணவனோடு 5 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 7 பேரை ஹோமாகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், மாணவியுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவி ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி மாணவி, டியூஷன் வகுப்பில் கலந்துகொள்வதாகக் கூறிவிட்டு, தனது காதலனான பாடசாலை மாணவனை சந்திக்கச் சென்றுள்ளார்.

அப்போது, சந்தேக நபரின் காதலன் என்று கூறிக்கொண்ட மாணவன், தனது நண்பர் ஒருவர் வசித்து வந்த ஹோமாகம பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு குறித்த மாணவியை அழைத்துச் சென்று, அங்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அதன்படி, விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலான ஆறு மணி நேரத்திற்குள் வேறு மூன்று வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சந்தேகத்திற்குரிய பாடசாலை மாணவனான காதலன் மற்றும் அவரது நண்பர்களால் கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஹோமாகம பகுதியைச் சேர்ந்த, அதே பகுதியில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் ஆவர்.

கைதானவர்களில் ஐந்து பேர் 15 முதல் 16 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள், மற்ற இருவர் 17 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் பாடசாலை மாணவியை ஏற்றிச் செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 7 சந்தேக நபர்களும் இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.