எதிர் வரும் காலப்பகுதியில் எமது மக்களின் வாழ்க்கை முறை மாற வேண்டும் எனில் இன்றுள்ள நாம் அதட்கான சிறந்த ஆக்கபூர்வாமான திட்டமிடல் மற்றும் செயல் முறையினை மேட்கொள்ள முயட்சி செய்ய வேண்டும். Kuchchaveli 2030 என்பது இன்னும் பத்து வருட காலப்பகுதியில் ஒவ்வொரு வீட்டிட்கும் ஒரு பட்டதாரியை உருவாக்கும் ஒரு பாரிய முயட்சியாகும். இம்முயட்சியின் ஒட்டுமொத்த வெற்றியும் ஒவ்வொரு குடும்ப உறுப்பினர் மீதும் சார்ந்துள்ளது. நாம் ஒவ்வொருவரும் இதனை நமது வாழ்வின் இலக்காக மாற்றிக்கொள்ளாத வரை எம்மால் எந்தவொரு சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தைக் கண்டுகொள்ள முடியவே முடியாது.
ஆசிரியர்களின் உயர்ந்த அர்ப்பணிப்பு
நமது மாற்றமும் அதிகூடிய உழைப்பும் ஆசிரியர்கள் நமது மாணவர்களுக்கு அர்ப்பணிப்போடு வழங்கும் கல்வியில் சிறந்த பிரதிபலனை உருவாக்கும். ஆசிரியர்கள் நமது மாணவர்களுக்கு வழங்கும் சிறந்த கல்வி, முறையான கவனிப்பு மற்றும் தொடர்ச்சியான கற்றல் முறை இல்லாதபோது மாணவர்களுக்கு முழுமையான பயனை வழங்காது. அதனால் தான் அதிகமான மாணவர்கள் தமது பயணத்தில் தோல்வியை சந்தித்திருப்பது காலம் சொல்லும் உண்மையாகும்.
ஆசிரியர்களின் பரிந்துரைக்கு பெற்றோர்கள் நிச்சயம் செவிசாய்க்க வேண்டும், ஒரு மாணவனின் தொடர்ச்சியான முன்னேற்றம் தொடர்பாக ஆசிரியரை அனுகி அம்மாணவன் தொடர்பான கருத்துக்களை செவிமடுத்து அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற தொடச்சியான தேடல் இருக்க வேண்டும்.
நமது பங்களிப்பு
எமது “Mentoring” வழிகாட்டுவோர் குழுவில் இணைந்துள்ள துறைசார் வல்லுனர்கள் மாணவர்களுக்கு இலவசமாக வழிகாட்ட தயார் நிலையில் உள்ளனர். பல பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் சிறந்த அனுபவமுள்ள நிபுணர்கள் நவீன கால தொழில் நிறுவங்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகைளில் மாணவர்கள் தம்மை வளர்த்துக்கொள்ள சிறந்த பயிட்சி, தொடர் கண்காணிப்பு, உதவி மற்றும் ஆலோசனை போன்றவற்றை வழங்குவது மாத்திரமின்றி குறித்த மாணவன் தனது துறையில் ஒரு வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ளும் முழுப் பொறுப்பும் அந்த வழிகாட்டும் (Mentor ) மீதே சுமத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நமது மாணவர்கள் தமது இலக்கை அடைந்துகொண்டார்களா என நாம் கண்காணிக்க முடியும்.