சித்த பாரம்பரிய ஆயுர்வேத மருந்தக திறப்பு விழா நிகழ்வு Dr.M.H.றிப்னாஸ் (BAMS) India அவர்களின் தலைமையில் அக்கரைப்பற்றில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ ஏ.எல்.எம் அதாஉல்லா அவர்கள் கலந்துகொண்டு சித்த பாரம்பரிய ஆயுர்வேத மருந்தகத்தை திறந்து வைத்தார்.
இதில் அக்கரைப்பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ,
பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ,
நிருவாக கிராம உத்தியோகத்தர் ,
சித்த ஆயுர்வேத வைத்தியர்கள் , வைத்திய உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர்.