ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் லங்கா ப்ரீமியர் லீக் அணியொன்றின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானியக் குடியுரிமையைக் கொண்டுள்ள பங்களாதேஷ் நாட்டவரான அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்றைய தினம் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்கான விசேட விசாரணைப் பிரிவினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.