2024.08.27

பரக்கா சரிட்டி – ஸ்ரீலங்கா நிறுவனத்தின் நிதியுதவியினால் குச்சவெளி அல்-நூரியா ஆரம்ப பாடசாலை மாணவர்களின் நலன் கருதி இரண்டு வகுப்பறைகள் கொண்ட கட்டடம் நிர்மாணிக்கும் பணிகள் இவ்வாரம் ஆரம்பமாக உள்ளது.

இச் செயற்திட்டத்தினூடாக, இப் பாடசாலை மாணவர்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கிய வகுப்பறைகள் இல்லாத பற்றாக்குறையை பூர்த்தி செய்ய முடியும்.

இத்திட்டத்திற்கான அனுமதியை பெற்றுக் கொள்வதற்காக துரிதமாக செயல்பட்ட பாடசாலையின் அதிபர் M.K. முபீன், திருகோணமலை வலய கல்வி பணிப்பாளர், கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர், மற்றும் கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் ஆகியோர்களுக்கும், பரக்கா சரிட்டி இலங்கைக்கான பணிப்பாளர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம்.முஜீப் அவர்களுக்கும் KVC Media network ஊர்மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

Leave a Reply