இன்று (2024.08.06) குச்சவெளி தி/தி/அந்-நூரியா கணிஸ்ட பாடசாலை தரம் 01, 02 மாணவர்கள் நீர் வசதி, மலசலகூட வசதியின்மையால் தரம் 4 , 5, 6 மாணவர்களின் கட்டிடத்திற்கு தற்காளிகமாக தஞ்சமடைந்துள்ளனர்.

தரம் 1,2,3 இல் கல்வி கற்கும் இம்மாணவர்கள் சுமார் 01 KM தூரத்தில் அமையப்பெற்றுள்ள தரம் 4,5 இல் கற்கும் மணவர்களுக்கான வகுப்பறைக் கட்டடத்தின் முன்றலில் தஞ்சம் புகுந்து நிற்கின்றனர்.

தகவலறிந்து எமது KVC மீடியா செய்தியாளர் ஏ.ஏ.றிஸ்மின் உரிய இடத்திற்குச் சென்று பிரதேச சபை செயலாளரை தொடர்பு கொண்டு உடனடி நீர்வசதியை பெற்றுக்கொள்வதற்காக நடவடிக்கையினை மேற்கொண்டதற்மைவாக செயலாளர் திரு.வெ.இராஜசேகர் தற்காலிகமாக பெளஸர் மூலம் நீர் வசதியைப் பெற்றுக்கொடுக்க ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளார்.இதற்காக KVC மீடியாவுக்கு நன்றியினையும் தெரிவித்துக்கொண்டார்.

மேலும், இதற்கான நிரந்தர தீர்வுக்காக எமது KVC செயலாளர் அவர்கள் திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளரின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று(2024.08.06) குச்சவெளி அந்நூரியா கணிஸ்ட வித்தியாலய தரம் 1,2,3 இல் கல்வி கற்கும் மாணவர்கள் சுமார் 1km தூரத்தில் அமையப்பெற்றுள்ள தரம்4,5 இல் கற்கும் மணவர்களுக்கான வகுப்பறைக் கட்டடத்தின் முன்றலில் தங்கள் தஞ்சம் புகுந்து நிற்கின்றனர்.

Leave a Reply