SMART SCHOOLS!! எதிர்வரும் சில மாதங்களில் நாடு முழுவதும் உள்ள முன்னணிப் பாடசாலைகள் 1250ஐ ஸ்மார்ட் பாடசாலைகளாக அபிவிருத்தி செய்து, அவற்றை ஒரே வலையமைப்பின் கீழ் கல்வி அமைச்சினால் செயல்படுத்தவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம் ஜெயந்த தெரிவித்தார்.
அதற்காக சீனாவிடமிருந்து 20 மில்லியன் டொலர் நிதி உதவி கிடைக்கவுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.