நாளைய ஊரடங்கு தளர்வின் போது பொதுவாக அனைவரும் குறிப்பாக முஸ்லிம் சமூகமும் விஷேடமாக கவனம் எடுத்து இன்னும் சில காலம் வீட்டை விட்டு வெளியேறாமல் சுய கட்டுப்பாட்டுடனும் பொறுப்புனர்ச்சியுடனும் நடந்து கொள்வது அவசியம்.

இதற்கான காரணம் எமது சமூகம் ஒவ்வொரு நோன்புடைய காலங்களை அடையும் போதும் ஏதாவது ஒரு வகையில் எமது சமூகத்திற்கு ஒரு பிரச்சினை இலகுவில் வந்துவிடுகின்றது இந்த பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் வகையில் நாம் பெரும்பான்மை சமூகத்தோடு ஒத்து எமது பயணங்களை மேற்கொள்ள வேண்டும். இந்த வருகின்ற ரமலானிலும் எமது சமூகத்திற்கு எந்தவித இடைஞ்சலும் இன்றி இலகுவாக அந்த மாதத்தை அடைந்து கொள்வதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் எமக்கு அருள்புரிய வேண்டும்.

Jawshaan

Leave a Reply