திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு உற்பட்ட 6 ஆம் வட்டாரம் கும்புருபிட்டியை வசிப்பிடமாக கொண்ட குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கி நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் குறித்த சம்பவம் இன்று 2025.01.08 காலை 5:30 AM மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன்,
குறித்த சம்பவத்தை குச்சவெளி பிரதேச திடீர் மரண விசாரணையாளர் பார்வையிட்டதன் பின்னர் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.