திருகோணமலை குச்சவெளியில் உள்ள பிச்சமல் விகாரைக்கு (கரடி மலை) விஜயம் செய்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், வணக்கத்துக்குரிய பௌத்த மதகுருவிடம் ஆசிர்வாதம் பெற்றதுடன், நடைபெற்று வரும் விகாரை புனரமைப்புப் பணிகளை நிறைவு செய்வதற்கு 1.5 மில்லியன் நிதியும், தொல்பொருள் அருங்காட்சியகத்தை ஆரம்பிப்பதற்கு 3.5 மில்லியன் நிதியும் ஒதுக்கீடு செய்தார்.

உள்ளூராட்சி சபைகளால் பராமரிக்கப்படாத விகாரையை சுற்றியுள்ள கடற்கரையை ஆய்வு செய்து, 24 மணி நேரத்திற்குள் கடற்கரையை சுத்தம் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்தார்.

Leave a Reply

You missed

தேசபந்து தென்னகோன் ஏப்ரல் 10 வரை மீண்டும் விளக்கமறியலில்..!

இன்று(03) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2023 ஆம் வருடம் வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் தேசபந்து தென்னகோனை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில் , 20 நாட்கள் தலைமறைவாக இருந்த பின்னர் மார்ச் 19 ஆம் திகதி அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அதன்படி, சந்தேக நபரான தேசபந்து தென்னகோனை இன்று (03) வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் உத்தரவிட்டிருந்தார்.