உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளை வினைதிறனாக கொண்டு செல்லும் நோக்குடன் பொது நிருவாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால்  மேற்கொள்ளப்பட்டு வருகின்ற Perfect 2.1 செயற்திட்டத்திற்கான மதிப்பீடுகள் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில் குறித்த மதிப்பீடுகளில் குச்சவெளி பிரதேச சபையில் செயற்பாடுகளை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்குடன் குறித்து Perfect-2.1  தொடர்பாக அலுவலக உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு குச்சவெளி  பிரதேச சபையின் செயலாளர் திரு.வெ.இந்திரஜித் அவர்களின் தலைமையில் 18.11.2024 ஆம் திகதி காலை 09.00 மணிக்கு குச்சவெளி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

குறித்த செயலமர்வில் வளவாளர்களாக திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தின் சிரேஷ்ட ஆய்வு உத்தியோகத்தர் திரு.S.சர்வேஸ்வரன் மற்றும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தின் ஆய்வு உத்தியோகத்தர் திருமதி.S.சியாந்தினி ஆகியோர் கலந்து கொண்டு குறித்த மதிப்பீடுகள் தொடர்பாக பிரதேச சபையின் உத்தியோகத்தர்களுக்கு விளக்கங்களை வழங்கினர்.

இதில் குச்சவெளி பிரதேச சபையில் தலைமை அலுவலக உத்தியோதர்கள் மற்றும் புல்மோட்டை, நிலாவெளி உப அலுவலக பொறுப்பதிகாரிகள் வருமான பரிசோதகர்கள், நூலக பொறுப்பாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply