பாடப்புத்தங்களை படிக்கும் முறைகள்.

  • அமைதியான சூழலில் படியுங்கள். உங்கள் எண்ணம் சிதறாமல், கவனம் திசை திரும்பாமல் இருக்கும்.
  • அட்டவணை போட்டு படிக்க துவங்குகள். அன்றைய தினம் என்னென்ன பாடங்கள் அட்டவணையில் உள்ளதோ, அதை அன்றே முடித்து விடுங்கள்.
  • சிலருக்கு அதிகாலை படிக்க பிடிக்கும்; சிலருக்கு நள்ளிரவு படிக்க பிடிக்கும். உங்களுக்கு எந்த நேரம் சரியாக உள்ளது என்று ஆராய்ந்து படிக்கவும்.
  • ஒரே நேரத்தில், இரண்டு வேலைகளை பார்க்கும் மனப்பான்மையை மாற்றுங்கள். ஒரு வேலையை செய்யுங்கள். அதை ஒரு மனதாக செய்யுங்கள்.
  • பெரிய வினாவை படித்தவுடனோ; எழுதியவுடனோ சிறிது இடைவெளி எடுக்கலாம். அது, மூளையை சோர்வடையாமல் காக்கும்.
  • படிக்கும் நேரத்தில் வேறு சிந்தனைகளையோ, மனதில் ஓட்டாதீர்.
  • பிடிக்காத பாடத்தையும், விருப்பத்துடன் படிக்க பழகுங்கள். நடைமுறை வாழ்க்கையில் உள்ள சம்பவங்களுடன், ஒப்பிட்டு பாடங்களை படித்தால் எளிதில் புரியும்.
  • பாடத்தை குறிப்பெடுத்து படித்தால், ரிவைஸ் செய்வதற்கு உதவியாக இருக்கும்.
  • ஒரு பாடத்தை 2 அல்லது 3 முறை திரும்பி பார்த்தால் மட்டுமே, மனதில் நன்கு பதியும்.
  • படித்து முடித்த பின், எழுதிப் பார்க்கலாம். அல்லது நண்பர்களுடன் படித்ததை கலந்து ஆலோசிக்கலாம். அவ்வாறு செய்தால், அவர்களிடமிருந்து நாம் படிக்காத சில தகவல்களையும் பெறலாம். சந்தேகங்களையும் தீர்க்கலாம்.

.

Leave a Reply