தம்மை கொரோனா வைரஸ் (கோவிட்-19) தாக்கியுள்ளதா இல்லையா என்பது தெரியாமலேயே இன்று பலர் நோய்களுடன் உலா வருகின்றனர் என சில அறிவியல் ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர்…
இந்த கொடூர வைரஸ் உடலில் நுழைந்து சில நாட்கள் கழித்ததன் பின்னரே அதன் அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது எனவும் இந்த வைரஸ் யின் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே தெரிந்துகொள்வதில் மூலம் அதற்கான முறையான சிகிச்சை பெற்று அதிலிருந்து நம்மையும் மற்ற உறவுகளையும் காத்துக்கொள்ள முடியும் என மருத்துவர்கள் முதட்கொண்டு ஆராச்சியாளர்களும் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்கா காது தொண்டை நோயியல் அகாடமியின் தலைமைச் செயல் அதிகாரியான ஜேம்ஸ் டென்னிஸ் இந்த வைரஸை ஆரம்பத்திலேயே கண்டறியும் முறை குறைத்து தகவல் வெளியிட்டுள்ளார். …அதாவது தடுமல் சளி போன்ற பிரச்சினைகள் ஏதுமின்றி பொருட்களை முகர்ந்தாள் மனம் தெரியாமல் போனாலும் , உணவுகளை சுவைத்தால் சுவை தெரியாமல் போனாலும் நமக்கு இந்த கொடூர வைரஸ் தாக்கியுள்ளது என்பதை புரிந்துகொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதனை வைரஸின் ஆரம்ப அறிகுறிகள் என கருதி உடனே மேலதிக பரிசோதனைகளை செய்துகொள்ள முடியும். அத்தோடு மற்றவர்களுக்கு இது பரவாமல் இருக்கும் விதமாக நாம் பொறுப்புடன் நடந்துகொள்ள முயட்சிக்க வேண்டும்.
இந்த வைரஸ் தாக்கத்தில் இருந்த அனைவரும் ஆரம்பத்தில் தமக்கு வாசனையோ சுவையோ தெரியமால் போனதாக அதிகமானவர்கள் கூறிய இருப்பதை ஆய்வாளர் ஜேம்ஸ் டென்னிஸ் மேற்கோள் காட்டியுள்ளார்.