காதலர் தினத்தைக்கொண்டாட யாழ்ப்பாணம் செல்ல தனது காதலி விரும்பாததால் மனமுடைந்த கிளிநொச்சியைச்சேர்ந்த இளைஞரொருவர் நேற்று கிணற்றில் குதித்து உயிரைமாய்த்துக் கொண்டுள்ளார்.
கிளிநொச்சி தர்மபுரம் ல், அம்பலபொக்கணை பகுதியைச்சேர்ந்த வர்ணகுலராசா பிரதீபன் என்ற 29 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவ்வருடம் காதலர் தினத்தைக்கொண்டாடுவதற்காக யாழ்ப்பாணம் சென்று வர அவர் தனது காதலியை பல முறை கேட்டிருந்தார். ஆனால், அப்பெண் அதற்கு சம்மதிக்கவில்லை.
அந்த இளைஞன் பலமுறை வற்புறுத்தியதால், அப்பெண் இளைஞன் மீது கோபமடைந்துள்ளார்.
இதனால் அந்த இளைஞன் மிகுந்த மனவுளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
சம்பவம் நடந்த நாளில், அவ்விளைஞன் தனது காதலிக்கு பலமுறை தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டதாகவும், ஆனால், பதிலளிக்காமல் தொலைபேசி இணைப்பைத் துண்டித்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் மனவுளைச்சலுக்குள்ளான இளைஞர், கிணற்றில் குதித்து உயிரைமாய்த்துக் கொண்டுள்ளார்.
கிணற்றிலிருந்து இளைஞனின் உடலை தர்மபுரம் காவல்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
