நாடளாவிய ரீதியில் 2000 கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான, போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து, நேர்முகப்பரீட்சைக்கு தகுதிபெற்றுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுக்குமான நேர்முகப்பரீட்சை, நாராஹேன்பிட்டியவில் அமந்துள்ள ‘நிலமெதுர’ வளாகத்தில் இன்று (13), நாளை (14) மற்றும் நாளை மறுநாள் (15) ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது.

நேர்முகப்பரீட்சைக்கான அழைப்புக் கடிதங்கள் தற்போது அனுப்பப்பட்டுள்ளன. நேர்முகப்பரீட்சைக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களில் எவரேனுக்கும் இதுவரையிலும் அழைப்புக்கடிதம் கிடைக்காவிடின், நேர்முகப்பரீட்சை இடம்பெறும் திகதி மற்றும் நேரம் என்பவற்றை அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் www.moha.gov.lk ஊடாக அறிந்து கொள்ள முடியும் என்று பொது நிருவாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், நேர்முகப்பரீட்சைக்கு கொண்டுவரவேண்டிய ஆவணங்கள் தொடர்பான தகவல்களை இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நேர்முகப்பரீட்சைக்கு தெரிவான 4232 விண்ணப்பதாரர்களுள் 2002 பேர் கிராம உத்தியோகத்தர் வெற்றிடங்களுக்காக தெரிவு செய்யப்படவுள்ளனர் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply