Flight

நமது பக்கத்து நாடான இந்திய இலங்கையில் நிலவும் கொரோனவைரஸ் தொற்றை எதிர்கொள்ளும் வகையில் இலங்கைக்கு தேவையான சுமார் 10டான் எடையுடைய மருத்துவப் பொருட்களை வழங்கி வைத்துள்ளது. இந்தப் பொதிகள் அனைத்தும் இந்தியாவுக்குச் சொந்தமான ஏர் இந்தியா தனியான விமானத்தின் மூலம் இன்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இவை அனைத்தயும் இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு அமைவாகவே கொண்டுவரப்பட்டதென இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்தது.

இந்திய தனது அண்டை நாடான இலங்கையுடன் மிக நெருக்கமான தொடர்பினை வைத்திருப்பதன் பிரதிபலிப்பே இது எனவும் இந்தியாவின் உள்நாட்டு நிலவரங்கள் நெருக்கடியான நிலையில் இருந்தாலும் பக்கத்துக்கு நாட்டுடனும் நமது நண்பர்களுடனும் கஷ்ட நஷ்டங்களில் என்றுமே கூடவே இருந்து இந்திய உதவிகளை வழங்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

KVC | Kuchchaveli News

By Admin

Leave a Reply