இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் நேற்று முன்தினம் (09) 22 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

மீனவர்களின் 3 படகுகளும் இதன்போது கைப்பற்றப்பட்டன.

பின்னர் 22 மீனவர்களும் ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் ஜெ.கஜநிதிபாலனிடம் முன்னிலைப்படுத்தப்பட்டநிலையி அவர்களை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, மீனவர் விவகாரத்தில் இலங்கையின் கடற்றொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் சற்று அமைதி காக்க வேண்டுமென கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா கோரியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடற்படையினர் குறித்த இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துவார்கள் என்பதுடன் இந்த விடயம் இரு நாடுகளின் இராஜதந்திர நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாகும்,

எனவே, இது தொடர்பில் ஜனாதிபதியும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சினூடாக இந்திய தரப்பினருடன் பேச்சுக்களை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

Leave a Reply