இந்த ஒரே ஆட்டத்தில் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார், மெஸ்ஸி.!

1. மெஸ்ஸி இதுவரை உலக கோப்பையில் 17 வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார். ஜெர்மனியின் ஜாம்பவான் மிரோஸ்லாவ் க்ளோஸ் 17 உலகக் கோப்பை போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் இவர் சாதனையை சமன் செய்துள்ளார், மெஸ்ஸி.

2. நேற்றைய ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருது பெற்றார், மெஸ்ஸி. இந்த 2022 உலகக் கோப்பை தொடரில் மொத்தமாக 5 ஆட்ட நாயகன் விருதுகளை வென்றுள்ளார். இதற்கு முன் எந்த ஒரு வீரரும் ஒரே உலகக் கோப்பையில் ஐந்து ஆட்டநாயகன் விருதுகளை வென்றதில்லை.

3. மெஸ்ஸி, இதுவரை 26 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளார். இதன் மூலம் ஜெர்மனியின் லோதர் மத்தாஸ் (25 ஆட்டங்கள்) சாதனையை முறியடித்து, உலகக் கோப்பையில் அதிக முறை விளையாடிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

4. இத்தாலியின் ஜாம்பவான் பாலோ மால்டினி உலகக் கோப்பை வரலாற்றில் அதிக நிமிடங்கள் (2,217- நிமிடங்கள்) விளையாடிய வீரர் ஆவார். மெஸ்ஸி, இந்த சாதனையை முறியடித்து உலகக் கோப்பை வரலாற்றில் அதிக நிமிடங்கள் விளையாடிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

5. மெஸ்ஸி கடந்த 2014 உலகக் கோப்பையில் கோல்டன் பால் விருதை வெற்றி பெற்றார். இந்த 2022 உலகக் கோப்பையிலும் கோல்டன் பால் விருதை வென்றுள்ளார். உலகக் கோப்பைப் போட்டியில் சிறந்த ஆல்ரவுண்ட் வீரருக்கு கோல்டன் பால் வழங்கப்படுகிறது. இதன் மூலம் மெஸ்ஸி, உலகக் கோப்பையில் இரண்டு ‘கோல்டன் பால்’ வென்ற முதல் வீரர் என்ற சாதனையை படித்துள்ளார்.

6. நேற்று நடந்த இறுதிப் போட்டியில் மெஸ்ஸி இரண்டு கோல்களை அடித்தார். ஒரே உலகக் கோப்பையில் குரூப் பிரிவு, சுற்று 16, காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் என அனைத்து சுற்றுகளிலும் கோல் அடித்த முதல் வீரர் லியோனல் மெஸ்ஸி ஆவார். 

7. மெஸ்ஸி, இறுதிப் போட்டியின் 23 வது நிமிடத்திலும், 108 வது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினார். உலகக் கோப்பை போட்டிகளில் இதுவரை மெஸ்ஸி 13 கோல்களை அடித்துள்ளார். இதன் மூலம் பிரேசில் ஜாம்பவான் பீலே- வின் (12 கோல்கள்) சாதனையை முறியடித்துள்ளார்.

By Admin

Leave a Reply